அமைய செலவு
நாம் எந்த ஒரு பொருளை பெற்றுக் கொள்ளும் போதும், அதற்கு பதிலாக இன்னொரு பொருளை தியாகம் செய்கிறோம். அந்த தியாகமே ‘அமையச் செலவு’அல்லது ‘வாய்ப்பு செலவு’ (Opportunity Cost) என்று அழைக்கப்படுகிறது. பொருளியலின் முக்கிய கருத்தான இது, வர்த்தக செயல்பாட்டு முடிவுகளில் பெரும் தாக்கத்தை செலுத்துவதாக உள்ளது. உதாரணத்திற்கு, +2 முடித்த சரவணன், ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கல்வி செலவு எப்படி கணக்கிடுவீர்கள்? அவருடைய டியூசன் கட்டணம், விடுதி கட்டணம், உணவு செலவு, புத்தக செலவு உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவைக் கூட்டித்தானே?. ஆனால், உண்மையான செலவு அந்த பண செலவு மட்டும் அல்ல... பின்னர் என்ன அது? இப்படி யோசித்து பாருங்கள்... சரவணன், +2 முடித்த பிறகு, அவனுக்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, கல்லூயில் சேர்ந்து படிக்க வேண்டும், இல்லாவிட்டால் எங்கேனும் வேலைக்கு செல்ல வேண்டும். கல்லூரியில் சேரவில்லை என்றால், அவன் ஏதேனும் ஒரு ஊதியத்துக்கு வேலை போயிருப்பான் தானே. இப்போது, சரவணுனுடைய வேலை மூலம், அவனுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை பட்டியலிடுங்கள்? நான்கு வருட அனுபவம், ...