Posts

Showing posts from April, 2017

அமைய செலவு

நாம் எந்த ஒரு பொருளை பெற்றுக் கொள்ளும் போதும், அதற்கு பதிலாக இன்னொரு பொருளை தியாகம் செய்கிறோம். அந்த தியாகமே ‘அமையச் செலவு’அல்லது ‘வாய்ப்பு செலவு’ (Opportunity Cost) என்று அழைக்கப்படுகிறது. பொருளியலின் முக்கிய கருத்தான இது, வர்த்தக செயல்பாட்டு முடிவுகளில் பெரும் தாக்கத்தை செலுத்துவதாக உள்ளது. உதாரணத்திற்கு, +2 முடித்த சரவணன், ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய கல்வி செலவு எப்படி கணக்கிடுவீர்கள்? அவருடைய டியூசன் கட்டணம், விடுதி கட்டணம், உணவு செலவு, புத்தக செலவு உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவைக் கூட்டித்தானே?. ஆனால், உண்மையான செலவு அந்த பண செலவு மட்டும் அல்ல... பின்னர் என்ன அது? இப்படி யோசித்து பாருங்கள்... சரவணன், +2 முடித்த பிறகு, அவனுக்கு முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, கல்லூயில் சேர்ந்து படிக்க வேண்டும், இல்லாவிட்டால் எங்கேனும் வேலைக்கு செல்ல வேண்டும். கல்லூரியில் சேரவில்லை என்றால், அவன் ஏதேனும் ஒரு ஊதியத்துக்கு வேலை போயிருப்பான் தானே. இப்போது, சரவணுனுடைய வேலை மூலம், அவனுக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை பட்டியலிடுங்கள்? நான்கு வருட அனுபவம், ...

பற்றாக்குறை எனும் உந்துசக்தி!

மனிதர்களுக்கு ஏராளமான விருப்பங்கள் உள்ளன; ஆனால், அத்தகைய விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் தேவையான அளவுக்கு பொருட்கள் இல்லாத நிலையையே பற்றாக்குறை (Scarcity) என்கிறோம். ஆனால், பற்றாக்குறைதான் பொருளாதாரம் இயங்குவதற்கு முக்கிய அடிப்படையாக இருக்கிறது. பற்றாக்குறையின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள, உலகில் பற்றாக்குறை இல்லாத ஒரு  சூழ்நிலையை கற்பனை செய்து பார்க்க வேண்டும். வங்கக்கடலில் தண்ணீருக்கு பதிலாக வற்றா பால் கடலும், நம் கைகளுக்கு எட்டும் தூரத்தில் காய்கறி காடுகளும், ஊட்டி பகுதி மலைகள் அளவுக்கு  அரிசி, தங்க மற்றும் வெள்ளி மலைகளும் இருக்கின்றன என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது, நாம் எப்படி இருப்போம் என்று கற்பனை செய்து பாருங்கள். எல்லாருக்கும் உணவு பஞ்சமின்றி கிடைப்பதால், யாரும் விவசாயம் செய்யவே தேவை இருக்காது. அதன் காரணமாக, உணவு வர்த்தகம் இருக்காது, யாரும் யாரிடமும் வேலைக்கு போக வேண்டிய தேவை இருக்காது. சமூகத்தில் இதனால், உழைப்பு இருக்காது. கொடுக்கல் வாங்கல், போட்டி, பணம் என்று எதுவுமே இருக்காது. மொத்தத்தில், பொருளாதார நடவடிக்கை ஸ்தம்பித்து நிற்கிற சூழ்நிலை உருவாகும...

பொருளியல் - மனிதனுடன் பிறந்த கலை

மனிதர்களாகிய நாம், நம் வாழ்க்கை வசதிகளை பெருக்க, ஏராளமான சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக, இன்றைய நவீன உலகில், மக்கள் பயன்பாட்டுக்காக லட்சோபலட்சம் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மக்கள்தொகை பெருக்கத்துகேற்ப, பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும், அவற்றை தயாரிக்கப் பயன்படும் உற்பத்தி ஆதாரங்களின் அளவு ஒரு எல்லைக்கு உட்பட்டதாகவே உள்ளது. அதாவது, அளவற்ற தேவை, ஆனால் அளவான வளம் என்கிற நிலை. இதை, உற்பத்தி வளங்களின் அருமை அல்லது பற்றாக்குறை (Scarcity) என்கிறோம். இத்தகைய சூழலில், பற்றாக்குறையான வளங்களை, எப்படி முறையாகப் பயன்படுத்தி மனிதர்களின் தேவையை நிறைவேற்றுவது என்பதைப் பற்றி விரிவாக படிப்பதையே 'Economics' (பொருளியல்) என்கிறோம். Oikonomia (ஓய்க்கோனோமியா) எனும் கிரேக்க சொல்லிலிருந்து Economics (எக்கனாமிக்ஸ்) என்ற வார்த்தை பிறந்தது. இதற்கு, வீட்டு நிர்வாகம் என்று பொருள். அதாவது, குடும்பத்துக்கு அத்தியாவசியமான பொருட்களைச் சம்பாதிப்பது எப்படி?, அதை சிக்கனமாக செலவு செய்து எப்படி?, எதிர்கால தேவைக்காக சேமித்து வைப்பது எப்ப...