Posts

Showing posts from December, 2014

The Cost of Corporate Communism

Posted: 03/18/2010 5:12 am EDT Updated: 05/25/2011 2:15 pm EDT Lately I have been using the phrase " Corporate Communism " on my television show. I think it is an especially fitting term when discussing the current landscape in both our banking and health care systems . As Americans, I believe we reject communism because it historically has allowed a tiny group of people to consolidate complete control over national resources (including people), in the process stifling competition, freedom and choice. It leaves its citizens stagnating under the perpetual broken systems with no natural motivation to innovate, improve services or reduce costs. Lack of choice, lazy, unresponsive customer service, a culture of exploitation and a small powerbase formed by cronyism and nepotism are the hallmarks of a communist system that steals from its citizenry and a major reason why America spent half a century fighting a Cold War with the U.S.S.R. And yet today we find ourselves as a country ...

Why Socialism (and Communism) Fails and why our society is being destroyed

Here on our forums at sythe.org we have may misguided misinformed souls. I'd like to attempt to correct that with a proper debate on these topics. Communism: Communism is an ideology that claims every man on the planet owns every item of value on the planet in joint ownership, including one another. That is to say: All matter and the lives of others are owned equally by everyone. Now there a several flavours of communism, but they tend to amount to the same thing. All advocate the eradication of the 'social classes', they aim to make every man equal, regardless of his talent and ability. The reason communism is a fallacy is simple: People cannot jointly own one another. The concept is fallacious. How can one man be a slave to another, when the other is a slave to the first? The second reason communism is a fallacy is the statement 'communism destroys the social classes and makes everyone equal'. This is fallacious because public assets must be controlled,...

பங்குச் சந்தை சூதாட்டம்!

Image
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி எழுதப்படுகிற எல்லா கட்டுரைகளிலும் பங்குச் சந்தை, பங்கு சந்தை சூதாட்டம், நிதி மூலதன கும்பல்கள், மூலதன வங்கிகள் என்ற வார்த்தைகள் தவறாமல் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் பங்கு என்றால்? ஒரு முதலாளி நிறுவனம் தொடங்க நினைக்கிறார். 10 லட்சம் முதலீடு தேவைப்பட்டால், தானே தனி நபராகவே தொடங்கிவிடுவார். இதுவே 20 லட்சம் என்றால், ஒருவரையோ இருவரையோ பார்ட்னராக சேர்த்து கொண்டு தொழில் தொடங்குவார். 50 லட்சம் என்றால் ... தனக்கு தெரிந்தவர்களை சேர்த்து கொண்டு பிரைவேட் லிமிடெட்-யாக தொடங்குவார். இதுவே அந்த தொழிலுக்கு தேவை 100 கோடி என்றால்... அதை பொது நிறுவனமாக (Public Limited) பதிவு செய்து, மொத்த தேவையும், 10 ரூ அல்லது ரூ. 100 பங்குகளாக பிரித்து, வெளியிடுவார்கள். அதை யார் வேண்டுமென்றாலும், 10 எண்ணிக்கையோ, அல்லது 100. எவ்வளவு தேவையோ அவ்வளவு வாங்கி கொள்ளலாம். இப்படி ஒன்று சேர்த்த நிதியை கொண்டு, அந்நிறுவனம் இயங்கத் தொடங்கும். இந்த நிறுவனத்தின் நிதி பொதுமக்களுடையதாக இருப்பதால், இதற்கு அரசு தரப்பில் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும். இந்நிறுவனத்தை கண்காணிக்க அ...

நிதி சந்தை (Financial market)

நிதி சந்தையில் ‘நிதி உரிமைகள்’ (Financial Claims) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் நிதி மீதான உரிமையைத் தருகின்ற பத்திரங்களை வாங்குவதும் விற்பதும் நடைபெறுகிறது. ஒவ்வொரு விதமான பாத்திரத்திற்கும் ஒரு சந்தையும் அதற்குரிய தனித்தன்மையோடு செயல்படும். ஒருவரின் கடன் பத்திரத்தை நீங்கள் வைத்திருந்தால் அவரின் நிதியில் உங்களுக்கு உரிமையிருக்கிறது என்று அர்த்தம். ஒரு நிறுவனத்தின் பங்கு பத்திரத்தை நீங்கள் வைத்திருந்தால் உங்களுக்கு அந்நிறுவனத்தின் நிதியில் உரிமை உள்ளது. நிதி உரிமையின் தன்மைகளெல்லாம் அப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் குறிப்பாக நிதியின் தன்மை, கால அளவு ஆகியவை மாறுபடும். இந்த நிதி உரிமைகளின் கால அளவுகள் அடிப்படையில் நிதி சந்தைகள் பிரிக்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கும் குறைவாக கால அளவு உள்ள பத்திரங்களின் சந்தைகளை பணச் சந்தை (Money Market) என்றும், ஒரு வருடத்திற்கு அதிகமாக கால அளவு உள்ள பத்திரங்களின் சந்தைகள் முதல் சந்தை (Capital Market) என்றும் பிரிக்கப்படுகிறது. நிதி சந்தை வேறு ஒரு விதத்திலும் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு பத்திரம் முதல் முறையாக விற்பனைக்கு வரும் போது அதனை ...

முதலாளித்துவமும், கம்யூனிஷமும்!

Image
அமெரிக்காவை கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா அல்லதுகொலம்பஸ்சா என்ற சந்தேகம் பலரை போலவே எனக்கும் இருக்கிறது,அமெரிக்கா என பெயர் வைத்து இருந்தாலும் அது அவரை பெருமை படுத்தும் வகையில் வைக்கப்பட்டது, உண்மையில் கண்டுபிடித்ததுகொலம்பஸ் தான், அதனால் தான் முக்கிய நகரத்துக்கு கொலம்பியாஎன பெயரிடப்பட்டது என சிலர் கூறுகிறார்கள்! சரி பற்றிய ஆராய்ச்சியை பிறகு பார்ப்போம், நன்றாக வளர்ந்த அமெரிக்கா எப்படி நாசமா போச்சுனு இப்ப பார்ப்போம்! பல அதிபர்களின் கடுமையான உழைப்பாலும், தொழில் புரட்சியாலும்அமெரிக்காவை வல்லரசாக மாற்றினார்கள், பின்னாளில் வந்தவர்கள் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி அமெரிக்காவை அதலபாதாளத்துக்கு தள்ளினார்கள், சில உதாரணங்களோட ஆரம்ப்பிகிறேன்! சில வருடங்களுக்கு முன் அரசின் கட்டுபாட்டில் இருந்த போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! கைக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் ஒரு ரூட்டில் பத்து பேருந்து சென்றதென்றால் அதை ஐந்தாக குறைப்பது, பின் சுலப தவணையில் அவர்கள் நிறுவ...

பங்குசந்தை- ஒரு சூதாட்டம்

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பட்டிதொட்டிஎங்கும் பேசப்படும் விசயமாக மாறி விட்டது. பொதுவாக வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணம் வரா கடன் என்றாலும், நிதி நிறுவனக்களின் வீழ்ச்சிக்கு காரணம் பங்களில் அவர்களின் முதலீடு தான் என்பது தெரிந்த விஷயம். அவர்களின் நட்டத்தில் அமெரிக்கா பங்கெடுத்து கொள்கிறது என்பது தெரிந்து விஷயம் தான். ஆனால் தெரியாத விஷயம் அவர்கள் நட்டப்பட்ட பணம் எங்கே சென்றது. வியாபாரம் என்பதின் பொதுவான விதி. வாங்குபவர் ஒருத்தர் விற்பவர் ஒருத்தர், ஒருவருக்கு லாபம் என்றால் ஒருவருக்கு நஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்க நிதி நிறுவனக்களின் நட்ட பணம் வேறு யாருக்கோ லாபமாக இருந்திருக்க வேண்டுமே, அது யாருக்கு, அந்த பணம் எங்கே? அது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நிதி நிறுவனக்கள் எத்தனையோ லட்சம் பேர்களை தற்கொலைக்கு தூண்டின என்று தெரியுமா, அதை சொல்வதற்கு முன் பங்கு சந்தைகளை பற்றி சில முன்னுரையும் தேவை. ஏற்கனவே பங்கு சந்தையை பற்றி அறிந்தவர்கள் இதில் ஏதும் தவறிருந்தால் சுட்டி காட்டலாம். பங்குகள் என்பது ஒரு நிறுவனம் தமது வளர்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு அவர்களையும் பங்குதாரர்களாக ம...

பொதுத்துறையின் பொறுப்புடைமை

சமீபகாலம்வரை பொதுத்துறையின் பொறுப்புடைமையை மீட்டெடுத்தல் குறித்துப் பேச யாருமே இல்லை. இடதுசாரி அரசியல்வாதிகள், இந்தப் பிரச்னையை ஏற்றுக்கொள்ளவே விரும்புவதில்லை. இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொருத்தமட்டில் அரசு ஊழியர்கள்தாம் அவர்களுடைய பெரும்பான்மைத் தொகுதியினர். அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுக்கின்றன. வலதுசாரி அரசியல்வாதிகளைப் பொருத்தமட்டில் பொதுத் துறை என்பதே ஒழித்துக்கட்டப்படவேண்டிய ஒன்று. எனவே கொஞ்சம் திறனின்மை, அதிகம் திறனின்மை என்று பிரித்துப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. வலதுசாரிகளின் நோக்கம் பொதுத்துறையை முன்னேற்றுவது அல்ல; மாறாக அவற்றை ஒழித்துக்கட்டித் தனியார்மயமாக்குவது. இந்தக் காரணங்களால் விநோதமாக, பொதுத்துறையின் பொறுப்புடைமையைக் கண்டுகொள்ளாத வலது-இடது கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. - ழான் ட்ரீஸ், அமர்த்ய சென், An Uncertain Glory.ட்ரீஸ், சென் புத்தகத்தில் பல சுவாரசியமான கருத்துகள் உள்ளன. நிறையப் புலம்பலும் உள்ளது. (பிசினஸ் ஸ்டாண்டர்ட் புத்தக விமரிசனத்தில் இந்தப் புத்தகமே ஒரு வேஸ்ட் என...

Arbitrage - என்றால் என்ன?

Arbitrage அன்னியச் செலாவாணி சந்தைகளின் விலைகளில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி எவ்வித நஷ்டம் இல்லாமல் arbitrage செய்யலாம். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். நியூயார்க் அன்னியச் செலாவணி சந்தையில் $ 1 = ரூ. 65 என்றும், மும்பை அன்னியச் செலாவணி சந்தையில் $ 1 = ரூ. 65.௦5 என்றால், இன்றைய துரித பணமாற்றும் முறையில் கோடிக்கணக்காக டாலரை நியுயார்க் சந்தையில் வாங்கி உடனடியாக மும்பை சந்தையில் விற்று ஒவ்வொரு டாலருக்கும் 5 பைசா சம்பாதிக்க முடியும். இவ்வாறு நியுயார்க் சந்தையில் டாலரை வாங்க வாங்க அங்கு மாற்று விகிதம் $ 1 = ரூ. 65 கொஞ்சம் கொஞ்சமாக உயரும். மாறாக மும்பை சந்தையில் டாலரை விற்க விற்க, அங்கு மாற்று விகிதம் $ 1 = ரூ. 65.௦5 குறையும். ஒரு நிலையில் இரு சந்தைகளில் மாற்று விகிதம் ஒரே அளவாக மாறும், அப்போது arbitrage நின்று போகும். Spot மற்றும் Forward மாற்று விகிதம் எந்த ஒரு நேரத்திலும் இரண்டு மாற்று விகிதங்கள் இருக்கும். ஒன்று Spot மற்றொன்று Forward. அன்னியச் செலாவணியை உடனடியாக வாங்கவும் விற்கவும் உள்ள மாற்று விகிதம் Spot விகிதம். அதுவே எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இன்றே விலையை நிர்ணயித்...

கருத்துக் கணிப்புகள் பொய்யாவது ஏன்?

Image
- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம் வாக்காளர்கள் மத்தியில் ஒரு கருத்தைத் திணிக்கவே கருத்துக் கணிப்புகள் பயன்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளைச் சமீப காலமாக அதிக அளவில் கேட்கிறோம். பொதுமக்களுக்கு இந்தத் தேர்தல் கணிப்புகளெல்லாம் பரபரப்புச் செய்திகள்தானே தவிர, வேறெதுவும் இல்லை. ஏனெனில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உண்மை நிலையைப் படம்பிடிப்பதில்லை. கருத்துக் கணிப்புக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பல சமயங்களில் சம்பந்தம் இல்லாமல் இருப்பதுதான் மக்களின் ஈடுபாட்டின்மைக்குக் காரணம். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... இந்தக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னுள்ள கணிதம் என்ன என்பதையும், கருத்துக் கணிப்புகள் நம்புவதற்கு ஏன் சிரமமாக இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் பார்க்கலாமா? ஒரு சோறு பதம் கருத்துக் கணிப்பு என்பது ஒரு கணிப்பு மட்டும்தான். ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஒருசிலரிடம் மட்டும் கருத்துகளைக் கேட்டு, அந்தத் தொகுதியில் யார் வெற்றிபெறக்கூடும் என்று கணக்கிடுவதுதான் இதன் அடிப்படை. ஒருசிலரிடம் மட்டும் கருத்து கேட்கும் இந்த சாம்பிளிங் முறைதான் முதல் பிரச்சினை. ‘ஒரு ப...

தேவை புதிய மாற்றங்கள்!

Image
நம் நாடு வளர்ச்சி காண வேண்டும் – அடுத்த சில வாரங்களில் அமையப்போகும் புதிய மத்திய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது இதுவாகவே இருக்கிறது. ஆனால், அடுத்துவரும் பிரதமர் யாராக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியை மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிதாக உயர்த்திவிட முடியாது. அப்படி உயர்த்துவதற்கு பல விஷயங்கள் தடையாக இருக்கிறது. இதில் முக்கிய தடையாக இருப்பது மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு. அடுத்துவரும் அரசாங்கமானது இந்த விஷயத்தில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே நம் நாடு வேகமான வளர்ச்சி காணும். என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் இராம.சீனுவாசன். ”நாட்டின் வளர்ச்சிக்கு தடைகளாக இருக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி தனித்தனியாகச் சொல்கிறேன். முதலில், தொழில் துறை பற்றி சொல்கிறேன். தொழில் துறை! ஒரு நாட்டின் வளர்ச்சி பிரமாதமாக இருக்க வேண்டும் எனில், தொழில் துறை நல்ல வளர்ச்சி காண வேண்டும். நம் நாட்டில் தொழிற்சாலை தொடங்கத் தேவையான நிலத்தை மாநில அரசாங்கம்தான் தரவேண்டும். மத்திய அரசாங்க...

நிதிநிலை அறிக்கை 2014-15 ஒரு பார்வை

தேர்தல்களையொட்டி அறிவிக்கப்படும் நிதிநிலை அறிக்கைகள்மீது எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம். வழக்கமாக மார்ச் மாதம் 20-ம் தேதிக்கு மேல்தான் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும். தேர்தல் ஆண்டுகளில் சற்று முன்னரே தாக்கல் செய்வது வழக்கம். நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த 2004-ம் ஆண்டு, பிப்ரவரி 11-ம் தேதி அ.இ.அ.தி.மு.க. அரசால் அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை (2004-05) தாக்கல் செய்யப்பட்டது; 2009-ம் ஆண்டு தி.மு.க. அரசு பிப்ரவரி 17-ம் தேதி நிதிநிலை அறிக்கையை (2009-10) தாக்கல் செய்தது. தேர்தல் அறிவிப்பு வந்த பின்பு அரசு புதிய திட்டங்கள், கொள்கைகள் வெளியிடக் கூடாது என்பதால் இந்த நடைமுறை. அதன்படி இந்த ஆண்டும் வழக்கத்தைவிட ஒரு மாதம் முன்னரே மாநில அரசின் நிதிநிலை அறிக்கை 2014-15 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரப் பின்புலம் இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் கே. ரோசய்யா கடந்த நிதியாண்டு (2012-13) தமிழகப் பொருளாதாரம் 4.14% வளர்ச்சியடைந்தது எனவும் இந்த ஆண்டு (2013-14) 5% என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் சுணக்கம் இரண்டு எதிர்மறையான விளைவுக...

பணத்தின் இருப்பை அளவிடும் முறை - என்றால் என்ன?

ஒவ்வொரு நாட்டிற்கும் சட்ட ரீதியான பணம் என்று ஒன்று உண்டு. நம் நாட்டின் ரூபாய், பைசா என்று நம் பணத்தை அலகுகளாகப் பிரித்துள்ளோம். இதில் ஒரு ரூபாயும் அதற்குக் குறைவான பைசாக்களும் மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிடுவதாகவும், இரண்டு ரூபாயும் அதற்கு மேல் உள்ள அளவுகளுக்கு ரூபாய்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாகவும் முன்பு ஒரு முறை பார்த்தோம். இவை மட்டுமல்லாமல், வங்கிகளில் உள்ள வைப்புக் கணக்குகளும் பணத்திற்கு சமமானவை. ஏனெனில், நாம் கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு காசோலை மூலமாகச் செலுத்தலாம். அரசும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் செலுத்துவதற்கு காசோலை அல்லது ஒரு demand draft-ஐ பயன்படுத்த நிர்பந்திக்கிறது. மேலும் நாம் எப்போது வேண்டுமானாலும் வைப்பு கணக்கில் உள்ள பணத்தை எவ்வித நஷ்டமும் இல்லாமல் எடுக்க முடியும். ஒரு நாட்டில் இருப்பில் உள்ள பணத்தின் அளவை எப்படி அளவிடுவது? இதனை பல்வேறு நிலைகளில் அளவிடும் முறைகள் உண்டு. Reserve money, M1, M2, M3, மற்றும் M4. முதலில் Reserve Money என்று ஒன்று உண்டு. பொது மக்களிடம் புழக்கத்தில் உள்ள காசு வில்லைகள், ரூபாய் தாள்கள், ரிசர்வ் வங்கியிடம் உள்ள வங்கிகளின் வைப்ப...

பணவீக்கத்துக்கு மருந்து

இராம. சீனுவாசன் "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு''. அப்படித்தான் பணமும். ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும். இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 - 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் ...

பணம் III - என்றால் என்ன?

தி இந்து இராம.சீனுவாசன் டிசம்பர் 26 2013 உலோக பணமானது உலோகத்தின் இருப்புக்கு ஏற்றவாறு மாறுபடும். அப்பணத்தின் அளிப்பை மத்திய வங்கி தனிச்சையாக மாற்ற முடியாது. சட்டரீதியான பணத்தை வெளியிடும் மத்திய வங்கி, பண அளவிற்கு ஈடான தங்கமோ அல்லது வேறு விலை மதிப்புள்ள உலோகங்களோ இல்லாமலே காகித பணத்தை (ஆனால், அரசாங்க பத்திரங்களுக்கு ஈடாக காகித பணத்தை வெளியிட முடியும்) வெளியிட முடியும் . இவ்வாறு பணத்தின் அளிப்பை தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியும் என்ற காரணத்திற்காகவும், காதிகப் பணத்தை நாடுகள் விரும்புகின்றன. எல்லா மத்திய வங்கிகளும் அந்தந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தனக்குத் தேவையான பணத்தை அச்சிட்டு கொடுக்குமாறு அரசு மத்திய வங்கியை பணிக்கலாம். எப்போதெல்லாம் தனது செலவை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறதோ அப்போதெல்லாம் பண அளிப்பை அதிகமாக்கி, அதனைக் கொண்டு அரசு தனக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆனால் இதில் ஒரு பெரும் சிக்கல் உண்டு. பண அளிப்பை அதிகமாக்கும் போது, நாட்டின் உற்பத்தி பெருகவில்லை என்றால், பணவீக்கம் ஏற்படும், அதாவது, பொருட்களின் விலைகள் உயரும். பணவீக்கம் ஏற்பாடும்...

மதிப்பும் பயன்பாடும் - என்றால் என்ன? இராம.சீனுவாசன்

மதிப்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு, ஒன்று, பொருளின் பயன்பாட்டு மதிப்பு. மற்றொன்று, பொருளின் வாங்கும் திறன் அல்லது பரிவர்த்தனை மதிப்பு. அதிக பயன்பாட்டு மதிப்புள்ள பொருளுக்கு குறைந்த பரிவர்த்தனை மதிப்பும், அதிக பரிவர்த்தனை மதிப்புள்ள பொருளுக்கு குறைந்த பயன்பாட்டு மதிப்பும் இருக்கும். தண்ணீரைவிட வாழ்க்கைக்கு பயனுள்ள பொருள் வேறெதுவும் இல்லை, ஆனால் அதனால் எதையும் வாங்க முடியாது. இதற்கு மாறாக, வாழ்க்கைக்கு எவ்வித பயனும் இல்லாத வைரத்தால் எதையும் வாங்க முடியும். பயன்பாட்டு, பரிவர்த்தனை மதிப்புகளை விளக்கப் பயன்படும் இந்தக் குறிப்பு, இதில் இல்லாத வேறு ஒன்றை விளக்கவும் பயன்படும்; அது தான் “இறுதிநிலை”. வாழ்வதற்குத் தேவை இல்லாத வைரத்திற்கு ஏன் அதிக விலை? வாழ்வதற்கு அவசியமான தண்ணீருக்கு ஏன் குறைந்த விலை? இந்த கேள்வி 1700 பின் பகுதியில் தொடங்கி 100 ஆண்டுகள் விவாதிக்கப்பட்டு 1800களின் பின்பகுதியில் விடை கிடைத்தது. ஒரு பொருளை நுகரும் போது கிடைக்கும் மொத்த பயன்பாட்டைவிட இறுதிநிலை பயன்பாடுதான் அதன் விலையை நிர்ணயிக்கும் என்பதுதான் அந்த விளக்கம். இதில் இறுதிநிலை என்பதை விளக்குவது சற்று கடினம...

காலத்துக்கேற்ற சிந்தனைகள்

இராம. சீனுவாசன் இந்தியாவில் 19, 20-ம் நூற்றாண்டுகளில் இருந்த அதிக வறுமைக்கு இரண்டு முக்கியக் காரணங்களை ரானடே (1842-1901) கூறுகிறார். ஒன்று, விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட பொருளாதாரம். இரண்டு, பிரிட்டிஷ் நவீனத் தொழில் பொருட்கள் இறக்குமதியினால், நலிவடைந்த சிறு கைவினைத் தொழில்கள். “ஒரு பொருளாதாரத்தில் எல்லாத் துறைகளும் சமமாக வளர வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் பின்தங்கிய தொழில் துறையை நவீனப்படுத்தினாலே இந்தியப் பொருளாதாரம் வளரும்” என்று ரானடே கூறிய காலத்தில், அதிலிருந்து காந்தி வேறுபட்டார். காந்தியின் சூத்திரம் ‘‘விவசாயம்+தொழில்+வியாபாரம் என்று பொருளாதாரத்தை வடிவமைக்க வேண்டும்’’ என்று ரானடேவும் மற்றவர்களும் கூறியபோது, ‘‘விவசாயம்+கைவினைத் தொழில் மட்டுமே போதுமானது. இதனால் மட்டுமே இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் வறுமையை ஒழித்து, கிராம சுயாட்சி என்ற நிலையை ஏற்படுத்த முடியும்’’ என்று காந்தி வாதிட்டார். அன்றைய இந்தியாவில் மூலதனம், தொழிநுட்ப அறிவு குறைவாகவும்… மக்கள் தொகை, நிலம் அதிகமாக இருப்பதையும் கருத்தில்கொண்டு, உழைப்பை மையமாகக் கொண்ட கைவினைத் தொழில்கள் வளர வேண்டும் என்று காந...

குவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

பத்ரி சேஷாத்ரி, 2004 சமாச்சார்.காம் இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கைவசம் இருக்கும் அன்னியச் செலாவணி இப்பொழுது சுமார் 118.255 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 10 செப்டம்பர் நிலை. மே 2004 முதற்கொண்டே அன்னியச் செலாவணி இந்த நிலையில்தான் உள்ளது. ஜனவரி 2000த்தில் கையிருப்பு 34.839 பில்லியன் டாலர்கள். ஜனவரி 2001இல் 40 பில்லியன் டாலர்கள், ஜனவரி 2002இல் 48 பில்லியன், ஜனவரி 2003இல் 70.3 பில்லியன், ஜனவரி 2004இல் 100.59 பில்லியன். ஆக, வருடம் தாண்டத் தாண்ட நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த அன்னியச் செலாவணி எல்லாமே அமெரிக்க டாலர்கள் கிடையாது. இதில் யூரோவும் உண்டு, ஜப்பானிய யென்னும் உண்டு, பிரிடிஷ் பவுண்டும் உண்டு, இன்னபிற கரன்சிகளும் உண்டு. ஆனால் அத்தனையையும் டாலர்களில் மாற்றிச் சொல்வார்கள். முதலில் இந்த அன்னியச் செலாவணி எப்படி நம் நாட்டுக்கு வருகிறது என்று பார்ப்போம். நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள் பொருட்களை, சேவைகளை வெளிநாடுகளுக்கு விற்கிறார்கள் - நெசவுப்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT Services), தொலை அழைப்பு மையம் போன்ற சேவைகள், இறால் ஏற்றுமதி,...

அன்னியச் செலாவணி மாற்று விகிதம் மாறுவதால் ஏற்படும் பாதிப்பு என்றால் என்ன

இராம.சீனுவாசன் அன்னியச் செலாவணி மாற்று விகிதம் மாறுவதால் ஒரு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்புகள் ஏற்படும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வது currency appreciation அல்லது revaluation என்று பார்த்தோம். $1 = ரூ.65-லிருந்து $ 1 = ரூ. 60 என அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வதாக வைத்துக்கொள்வோம். இதுவரை ஒரு டாலருக்கு ரூ. 65 மதிப்புள்ள இந்தியப் பொருட்களை பெற்ற அமெரிக்கர்கள் இப்பொது ரூ. 60 மதிப்புள்ள இந்தியப் பொருட்களையே பெறுவர். அதாவது, இந்திய பொருட்களின் விலைகள் அமெரிக்கர்களுக்கு உயர்ந்துள்ளது. இதனால், அமெரிக்கர்கள் குறைவாக இந்திய பொருட்களை வாங்கக்கூடும், எனவே, இந்தியாவின் ஏற்றுமதி குறையும். ஆனால் அமெரிகர்களுக்கு இந்திய பொருட்களின் தேவை இன்றியமையாததாக இருந்தால், இந்தியாவின் ஏற்றுமதி குறையாது. பொதுவாக இந்திய துணிகளை அமெரிக்கர்கள் எவ்வளவு விலை கொடுத்துதான் வாங்குவார்கள் என்றால், (ஏற்றுமதி தேவைக்கான விலை நெகிழ்ச்சி (price elasticity) குறைவு என்று அர்த்தம்) இந்திய ரூபாய் appreciate ஆனாலும் இந்தியாவின் ஏற்றுமதி குறையாது. இதுவரை ஒரு டாலர் மதிப்...

Purchasing Power Parity (PPP) - என்றால் என்ன?

இராம.சீனுவாசன் இரு நாடுகளுக்கு இடையே உள்ள spot exchange rate அந்த இரு நாடுகளின் பணவீக்கத்தின் இடைவெளிக்கேற்ப மாறுபடும் என்பதுதான் Purchasing Power Parity (PPP). வேறுவிதத்தில் சொல்வதானால், ஒரு நாட்டின் பணம் எல்லா நாடுகளிலும் ஒரே அளவு வாங்கும் திறனுடன் இருப்பது தான் PPP. இதில் இரண்டு வகை Absolute PPP, Relative PPP. Absolute PPP: பன்னாட்டு வியாபாரத்தில் உள்ள ஒரு பொருளின் விலை எல்லா நாடுகளின் பணத்திலும் ஒரே அளவாக இருக்கவேண்டும், அதாவது, ஒரு நாட்டின் பணம் எல்லா நாடுகளிலும் ஒரே அளவு வாங்கும் சக்தியை பெற்றிருக்கவேண்டும். உதாரணமாக ஒரு செருப்பு இந்தியாவில் ரூ 100 என்றும், அமெரிக்காவில் $ 2 என்றும், ரூபாய்-டாலர் மாற்று விகிதம் $ 1= ரூ 50 என்றால், இந்தியாவில் உள்ள செருப்பை ரூ 100 வாங்கி, அமெரிக்காவில் விற்றால் $ 2 கிடைக்கும், இதனை மீண்டும் இந்தியாவில் ரூ 100 என மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு, spot exchange rate யில் மாற்றும் போது, இரு நாடுகளிலும் செருப்பின் விலை ஒரே அளவில் உள்ளதை பார்க்கலாம். Relative PPP: இதில் இரண்டு நாடுகளில் உள்ள பணவீக்கத்தின் அளவுகளுக்கு ஏற்ப spot exchange rate மாறும். உதாரணமாக...

அன்னியச் செலாவணி சந்தை - என்றால் என்ன?

இராம.சீனுவாசன் ஒரு நாட்டின் பணத்தை வேறு ஒரு நாட்டின் பண அளவில் குறிப்பிடுவது அன்னிய செலாவணி மாற்று விகிதம் என்பதை நேற்று பார்த்தோம். உதாரணமாக ரூ. 65 = $1 என்றும் அல்லது ரூ .1.= 1.15 சென்ட் என்றும் மாற்று விகிதத்தை குறிப்பிடலாம். அன்னியச் செலாவணி சந்தையில் ஒரு டாலரை வாங்கும்போது ஒரு விலையும் (இதனை Bid என்பர்) அதே போல் விற்கும் போது ஒரு விலையும் (இதனை Offer என்பர்) குறிப்பிடுவர். ஒரு டாலரை ரூ. 65-க்கு வாங்கவும், ரூ 65.20 விற்கவும் செய்வதாக குறிப்பிடலாம். இந்த இரண்டுக்கும் உள்ள இடைவெளி 20 பைசா என்பது spread என்பர். இந்த spread தான் அன்னியச் செலாவணி சந்தையில் வியாபாரிக்கு ஏற்படும் லாபம். இந்த spread வியாபாரிக்கு வியாபாரி மாறும். ஒரு நாட்டின் பணம் அடிக்கடி பெரிய அளவில் தொடர்ந்து வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் இருக்குமேயானால், அதில் spread குறைவாக இருக்கும். ஒரு நாட்டின் பணம் எப்போதாவது சிறிய அளவில் வாங்கப்பட்டு விற்கப்பட்டால் அதில் spread அதிகமாக இருக்கும். ஒரு நாட்டின் அன்னியச் செலாவணி சந்தையில் நான்கு வகை நபர்கள் உண்டு, ஒன்று, அன்னியச் செலாவணியை வாங்கவும் விற்கவும் உள்ள தனி நபர்கள் மற்று...

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும். சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும். மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது. வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே ம...

கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

உலகில் இதுவரை உண்மையான கம்யூனிச அமைப்பு, எந்த ஒரு நாட்டிலும் உருவாகவே இல்லை. சோவியத் ரஸ்ஸியா போன்ற நாடுகளில் சோசியலிச அரசு அமைக்கப்பட்டு, படிப்படியாக கம்யூனிசத்தை நோக்கி நகரும் காலங்களில், திரிபுவாதிகள் தோன்றி, சீரழித்துவிட்டார்கள். இதுதான் தோழர்களின் version of history. கம்யூனிசம் என்ற சொல் கம்யூன் (commune), அதாவது சமூகம் என்ற சொல்லிருந்து உருவானது. (இதற்க்கு சரியான எதிர்மறை சொல் முதலாளித்துவம் அல்ல. மாறாக தனிநபர்வாதம். Individualism.) எளிமையாக கூறுவதானால், ஒவ்வொறு தனிமனிதனையும், தன் முழு உழைப்பையும், தான் சார்ந்துள்ள கம்யூனிற்க்கு (சமூகத்திற்க்கு), முழுமனதுடன், (அச்சமூகம் அளிக்கும் சமளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு) அளிக்க தயார் செய்வது. From each according to his ability, to each according to needs.. இதில்தான் சிக்கலே. மனித மனங்களை (human psychology) பற்றிய போதிய தெளிவில்லாமல் உருவாக்கப்பட்ட சித்தாந்தம் இது. அதாவது அனைத்து மக்களையும் உண்மையான கம்யூனிஸ்டுகளாக, சுயநலமே இல்லாத பொது உடைமைவாதிகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சித்தாந்தம். ஆனால் நடைமுறையில் இது சாத்திய...