முதலாளித்துவமும், கம்யூனிஷமும்!




அமெரிக்காவை கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா அல்லதுகொலம்பஸ்சா என்ற சந்தேகம் பலரை போலவே எனக்கும் இருக்கிறது,அமெரிக்கா என பெயர் வைத்து இருந்தாலும் அது அவரை பெருமை படுத்தும் வகையில் வைக்கப்பட்டது, உண்மையில் கண்டுபிடித்ததுகொலம்பஸ் தான், அதனால் தான் முக்கிய நகரத்துக்கு கொலம்பியாஎன பெயரிடப்பட்டது என சிலர் கூறுகிறார்கள்! சரி பற்றிய ஆராய்ச்சியை பிறகு பார்ப்போம், நன்றாக வளர்ந்த அமெரிக்கா எப்படி நாசமா போச்சுனு இப்ப பார்ப்போம்!

பல அதிபர்களின் கடுமையான உழைப்பாலும், தொழில் புரட்சியாலும்அமெரிக்காவை வல்லரசாக மாற்றினார்கள், பின்னாளில் வந்தவர்கள் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி அமெரிக்காவை அதலபாதாளத்துக்கு தள்ளினார்கள், சில உதாரணங்களோட ஆரம்ப்பிகிறேன்!

சில வருடங்களுக்கு முன் அரசின் கட்டுபாட்டில் இருந்த போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! கைக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் ஒரு ரூட்டில் பத்து பேருந்து சென்றதென்றால் அதை ஐந்தாக குறைப்பது, பின் சுலப தவணையில் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான காரை விற்பது, வீட்டுக்கு ஒரு கார் என்ற விளம்பரத்தின் மூலம் அவர்களது விற்பனை கனஜோராக நடந்தது, நடுத்தரவர்க்கமும் இமேஜ் கருதி கடன் வாங்கி கார் வாங்கினார்கள், சில வருடங்கள் குடும்பத்துக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் அமெரிக்காவில் கார் இருந்தது! பேருந்து பெயரளவே இயக்கப்பட்டது, நடுத்தரவர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் மேலும் கீழ் சென்றார்கள், அவர்களை பற்றி இன்றளவும் எந்த முதலாளிகளுக்கும் அக்கறையில்லை!

மேலுள்ளது ஒரு சாம்பிள் தான், அதன் பின் தற்போது ஏற்பட்ட பெரும்சரிவுக்கு காரணம் வேறு, நுகர்வோரை மட்டுமே நம்பியிருக்கும்அமெரிக்க முதலாளிகள், அவர்களை கையில் வைத்து கொள்ள அள்ளி அள்ளி கடன் கொடுத்தார்கள், உலகிலேயே அதிக கிரிடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம் என்ற கணக்கெடுப்பு சொன்னது, நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 90% பணம் கடனாக வங்கியே கொடுக்கும், மீதியையும் அவர்கள் வேறிடத்தில் கடனாக பெற்றனர், வெறும் கடனிலேயே வாழ்க்கையை ஓட்டிய அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிக வட்டியால் சரிந்தது, மிக அத்தியாவிசய பொருள் தவிர மற்ற பொருள்களின் விலை சரிந்தது!

மிக முக்கியமாக ரியல் எஸ்டேட், நீங்கள் ஒரு லட்சத்திற்கு வாங்கிய வீடு வெறும் ஐம்பதாயிரத்துக்கு தான் போகுமென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும், கடன் நிலுவையுள்ளவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டு விட்டு தங்களது நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பிவிட்டனர், இன்றும் பல குடும்பங்கள் வாகனங்களிலேயே திரிந்து கொண்டிருப்பதாக தகவல் உண்டு, விலை குறைந்த சொத்தை பறிமுதல் செய்தாலும் கொடுத்த பணத்திற்கு ஈடாகாது வங்கிக்கு, அதனுடன் கடனட்டை மூலம் வராக்கடன்கள் கோடிகணக்கில் ஏறியது, வங்கியில் ஆரம்பித்து ஒன்றுடன் ஒன்று தொடர்பாக அனைத்து தொழில்களும் முடங்கின!

பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர், வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களிடம் வேலை பறிக்கப்பட்டது, நாடு திரும்ப முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டனர்(வழக்கம் போல் வெளிவராது). அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த அனைத்து நாடுகளும் சற்றும் எதிர்பாராத சரிவை சமாளிக்க முடியாமல் பொருளாதார பின்னடவை கண்டது, தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முடிந்த தகுதியான சில நாடுகள் மட்டும் காலூன்றி நின்றது, அமெரிக்க அரசும் பல கோடி நிதி அளித்து பல முதலாளிகளுக்கு உதவி செய்தது, ஆனாலும் நேற்று வரைஅமெரிக்காவில் திவால் ஆன வங்கிகளின் எண்ணிக்கை 124!. பலகோடிகள் பேப்பரை டாலராக மாற்றி அரசு பல நிறுவனங்களில் தம்மையும் பங்குதாரராக ஆக்கி கொணடது! (இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்ல)

****

இந்தியாவில், இந்திராகாந்தி பிரதமராக இருந்த சமயங்களில் தனியார் வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன! அதனாலேயே பலருடய எதிர்ப்பை அவர் சம்பாரித்தார், இன்றும் சில முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு இந்திராகாந்தியை பிடிக்காது, அதற்கு பல அரசியல் காரணங்கள் கூட சொல்வார்கள்!

தமிழகத்தில் நான் பிறப்பதற்கு டி.வி.எஸ் கையில் போக்குவரத்து இருந்ததாக சில பெருசுகள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், இன்றும் இருந்திருந்தால் நம் அனைவருக்கும் நிச்சயமாக ஒரு டி.வி.எஸ் 50 யாவது கையில் இருந்திருக்கும் அதாவது வாங்க வைக்கப்பட்டிருப்போம்! இன்றும் கூட பெங்களூரில் தனியார் பேருந்துகளும் அரசுக்கு இணையாக இயங்குகின்றன!, ஒருவேளை அரசு பேருந்து இல்லையென்றால் தனியார் வைத்தது தான் சட்டம்! சில முதலாளித்துவவாதிகள் சொல்வார்கள் ஏன் ஒருவருக்கு மட்டும் கொடுக்கிறீர்கள் பலருக்கு பகிர்ந்து கொடுங்கள் என்று.

இந்தியாவில் இருக்கும் தனியார் கேபிள் ஆப்புரேட்டர்கள் கண்டிப்பாக தூர்தர்ஷன் சேனலை ஒளிபரப்ப வேண்டும், அவர்களும் ஒளிபரப்புவார்கள் ஆனால், சிக்னல் மிக குறைவாக உள்ள பேண்ட்வித்தில் வெளிச்ச புள்ளியாக, இரைச்சலாக இது தான் பொதிகை என்று நாமே கண்டு பிடித்து கொள்ள வேண்டியது தான்! அரசுக்கு இப்படியென்றால் தனியாருக்கு எப்படியிருக்கும் இருட்டடிப்பு!?, எத்தனை பேருக்கு கொடுத்தாலும் வலியவன் ஒருவன் அனைவரையும் கவுட்டுக்குள் அமுக்கி வைத்து மேலேறி உட்கார்ந்து கொள்வான், நுகர்வோர் தேவைகளை மறந்து தருவதை பெறும் நிலைக்கு தள்ளப்படுவோம்!




***

மேட்டர் என்னான்னா!. கம்யூனிஷம் என்பது தனி மனித கொள்கையாக இல்லாமல் ஒரு நாடு தன் கொள்கையாக வைத்திருந்தது, அது சக வல்லரசான ரஷ்யா , இன்று அதுவும் பல துறைகளை தனியாருக்கு வழங்கி கொண்டிருக்கிறது! ஒரு நாடு முழுக்க முழுக்க கம்யூனிஷ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ஆப்பு தான், தனியாருக்கும் வாய்ப்பு வழங்கலாம் ஆனால் அரசின் கட்டுபாடு இருக்க வேண்டும், இல்லையென்றால் இங்கேயிருந்து எடுத்து நமக்கே இயற்கை எரிவாயுயை விற்க முயன்ற ரிலையன்ஸ் முதலைகள் போன்ற பல தோன்றி நம்மை மீண்டும் ஒரு காலணிய அடிமைதனத்திற்கு கொண்டு செல்லும்!

Comments

Popular posts from this blog

அமைய செலவு

பங்குச் சந்தை சூதாட்டம்!

விலைவாசி உயர்வு ஏன்?