'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்
ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட கிழக்கிந்திய கம்பேனியின் ஞாபகம் இன்னும் பலரையும் வாட்டுகிறது. சூழ்நிலைகளும், கால கட்டமும் பலவிதமாக மாறினாலும் இந்த பயம் இன்னும் பல இடது மற்றும் பிற சிந்தனைகளை இன்றும் பாதிக்கிறது.
'பன்னாட்டு நிறுவனங்களை இங்கு தொழில் தொடஙக அனுமதித்தால், அவை நம் வளங்களை சூறையாடும் ; ஏழை தொழிலாளிகளை சுரண்டும், சிறு தொழில்களை அழிக்கும், அரசின் கொள்கைகளை மறைமுகமாக கட்டுப்படுத்தும்' ; இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள், பயங்கள். 1950 முதல் 1991 வரை நமது பொருளாதார கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டன.
1955இல் யு.எஸ்.ஸ்டீல் என்னும் அமெர்க்க கம்பெனி, பிகார் / ஒரிசா பகுதிகலில் ஒருபெரிய எஃகு ஆலை அமைக்க விரும்பியது. ஆனால் நமது 'ஜனனாயக சோசியலிச' அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. அந்நிறுவனம் முதலீடு (டாலர்களில்), தனது தொழில்நுட்பம் மற்றும் (மேனெஜ்மென்ட்) நிர்வாக மேலான்மை போன்றவற்றை முழுவதும் இங்கு பயன்படுத்த தாயாராக இருந்தது. ஆனால் அரசு மிக அதிக செலவில், பொதுத் துறையில், பிலாய் எஃகு ஆலை அமைத்தது. அந்த ஆலைக்கு தேவையான பல ஆயிரம் கோடி முதலீட்டை நாம் கடன் வாங்கியும், மக்களின் வரிப்பணத்திலிருந்தும் செலவளித்தோம். பல ஆண்டுகள் நஷ்டத்திலும், லஞ்ச ஊழ்ல்களிலும், நிர்வாக சீர்கேடுகளிலும் அது நமக்கு மிகப் பெரிய சுமையாக இருந்தது. அதே சமயம் எஃகு தேவை மிக அதிகரித்ததால், பற்றாக்குறைகள், கருப்பு மார்க்கெட் உருவானது. சோசியலிச கொள்கைகளின்படி, எந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது இஷ்ட்டம் போல் தன்து உற்பத்தியை பெருக்க அனுமதி இல்லை. அதனால் டாடா ஸ்டீல் நிறுவனமும் உற்பத்தி திறனை (புதிய ஆலைகள் அமைத்து) அதிகப்படுத்த முடியவில்லை. கடுமையான பற்றாக்குறை, விலை உயர்வு, கள்ள சந்தை, ஊழல் உருவாகின.
சிமன்ட், சர்கரை, உரம், மருந்து, பொறியியல் எந்திரங்கள், ஜவுளி ஆலைகள் மற்றும் அனைத்து துறைகளிலும் இதே கதைதான். செயற்கையான பற்றாக்குறை, உலக சந்தையை விட மிக அதிக விலை, தரக்குறைவான பொருள்கள், கள்ள மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், போன்ற எதிர்மறையான விளைவுகளே உருவாகின. விலைவாசி இதன் மூலம் கடுமையாக உயர்ந்ததால் வறுமை மிக அதிகமானது.
வரி விதிப்பும் மிக மிக அதிகமாக்கப்படதால் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்க தொழில் முனைவோர் விரும்பவில்லை. அரசாங்க வேலைக்கு செல்லவே பெரும்பாலான இளைஞ்ர்கள் விருப்பினர். ஆனால் எல்லேருக்கும் அரசு வேலை தர எந்த காலத்திலும் இயலாது. ஆகவே வேலை இல்லா திண்டாடம் மிக மிக அதிகமானது.
1977இல் அய்.பி.எம் நிறுவனத்தை ஜனதா அரசு நாட்டை விட்டே துரத்தியது. அவர்கள்தாய்லாந்திலும், சைனாவிலும் தங்கள் ஃபெக்ட்ரிகளை அமைத்தனர். நாம் பல ஆண்டுகளை வீணடித்தோம். இறக்குமதி செய்ய டாலர்கள் இல்லாததால், உலக வங்கி (ஐ.எம்.எஃப்) இடமிருந்து பல ஆயிரம் கோடி டாலர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம். வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. இவ்வாறு திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி கட்டுப்பாடுகளை தளர்தி, அந்ந்திய முதலீடுகளையும், பன்னாட்டு நிறுவனஙகளையும் 1991க்கு பின் தாராளமாக அனுமதித்தோம்.
இன்று பல நூறு பன்னாட்டு நிறுவங்கள் இங்கு சுதந்திரமாக தொழிறசாலைகள் அமைத்து மிக அருமையான, மலிவான பொருட்க்களை உற்பத்து செய்கின்றனர். இதனால் பல லச்சம் பேர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு, அரசுக்கு மிக அதிக வரி வசூல், மற்றும் மக்களுக்கு மலிவான, தரமான பொருள்கள் கிடைக்கின்றன. உதாரணமாக : நோக்கியா செல் போன் நிறுவன்ம் சென்னை அருகே உருவானவுடன், 1500 ரூபாய்க்கு நல்ல செல்போன் கிடைக்கிறது. இன்டெல், அய்.பி.எம், மைக்ரோசாஃப்ட்,ஜி.ஈ., அல்ஸ்தோம், ஹுன்டாய், போர்ட், எ.பி.பி., ஹோன்டா, மிட்ஷுபிஷி, மற்றும் பல நிறுவனங்கள் வந்து உள்ளன. அன்னிய செலாவானி இருப்பும் மிக,மிக அதிகமாகி இன்று அய்.எம்.எஃப் வங்கியிடம் கடனே வாங்க அவசியமில்லா நிலை !!!
புதிய போட்டியினால், இதுவரை ஏகபோகத்தில் சுகமாக வளர்ந்த இந்திய நிறுவனங்கள் (உ.ம் : பி.ஸ்.என்.எல், பஜாஜ் ஆட்டோ, அய்.டி.அய், எஸ்.பி.அய் போன்றவை) தஙகளின் மெத்தன போக்கிலிருந்து மீண்டு, தரத்தை உயர்த்தி, உற்பத்தி செலவை குறைத்து, நவீன தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.
பன்னாட்டு நிறுவனங்கள், எதோ ஹைடெக் பொருட்க்களை 'பணக்கார' வர்கத்திற்க்காக மட்டும், ஏழை தொழிலாளர்களை 'சுரண்டி', தயாரிக்கினறன என்ற பொய்யான வாதத்தை, பிரமையை இடதுசாரிகள் உருவாக்குகின்றனர். இந்தியாவை மீண்டும் காலனியாக்குகின்றன இவை,என்றும் கதைக்கிறார்கள். முதலாவுதாக இது போன்ற நிருவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட மிக அதிக சம்பளம், சலுகைகள். மக்களுக்கு மிக நல்ல சேவைகள்/பொருட்க்கள். அரசாஙக்திற்க்கு நல்ல வரி வசூல் (அதன் மூலம் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள், நலத்திட்டங்களை அமல் படுத்த வாய்ப்பு). நாட்டின் பொருளாதாரம் முன்னேற வாய்ப்பு.
1991க்கு முன் இருந்த நிலைமையே பரவாயில்லையா ? ஒப்பிட்டு பாருங்கள். அனேகமாக இதை படிக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பன்னாட்டு நிருவனங்களினால் பயன்டைந்திருப்பீர்கள். அல்லது வேலை வாய்பை பெற்றிருப்பீர்கள். யோசியுங்கள் நணபர்களே.
Comments
Post a Comment